அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் இரண்டு புதுமையான இளம் விவசாயிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

0
142

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிநவீன விவசாய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் இரண்டு புதுமையான இளம் விவசாயிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். அவர்களில் அநுராதபுரம் திரப்பனை புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பந்துல முனசிங்க என்பவர் அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு 09 மாதங்களில் 12 மில்லியன் ரூபாய்.மற்றைய விவசாயியான கல்குளத்தை சேர்ந்த புத்திக சுதர்சன என்பவர் குறிப்பிடத்தகுந்த வருமானமாக ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டு இரண்டு மாதங்களில் 04 மில்லியன்.தமது அறுவடையின் ஒரு பகுதியுடன், இந்த இளம் விவசாயிகள், அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியை சந்தித்தனர்.

பந்துல முனசிங்க விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் அரை ஏக்கர் மிளகாய் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உயர் அடர்த்தி சாகுபடி முறையை பின்பற்றினார்.பாரம்பரிய விவசாய முறைகளில், அரை ஏக்கரில் பொதுவாக 6000 மிளகாய் செடிகள் உள்ளன. இருப்பினும், அதிக அடர்த்தி கொண்ட சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம், இந்த எண்ணிக்கை 13,000 தாவரங்களாக அதிகரித்துள்ளது, இது உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த புதுமையான அமைப்பு விளைச்சலை பல மடங்கு பெருக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான புத்திக சுதர்ஷனவும் இந்த முற்போக்கான அணுகுமுறையைத் தழுவிய ஒரு நபராவார்.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் கணிசமான விளைச்சலைப் பெற்றதாகவும், இதன் விளைவாக கணிசமான வருமானம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு கிலோ தர்பூசணியை தோராயமாக ரூ.180க்கு விற்று இதை சாதித்தார். நாட்டில் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்த இளம் விவசாயிகள் முன்மாதிரியான நபர்களாக செயற்படுகின்றனர் என்பதை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here